கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

முதல் அணியாக வெளியேறியது ஹைதி: பிரேஸில் குன்ஹா அபாரம்

முதல் அணியாக வெளியேறியது ஹைதி...

News image

2 கோலடித்த பிரேஸில் வீரா் மேத்யூஸ் குன்ஹா

Updated On :21 ஜூன் 2026, 2:02 am IST

குரூப் சி பிரிவில் குட்டி நாடான ஹைதியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ஜாம்பவான் பிரேஸில். உலகக் கோப்பையில் முதல் அணியாக வெளியேறியது ஹைதி.

இரு அணிகளுக்கு இடையிலான குரூப் சி பிரிவு ஆட்டம் பிலடெல்பியாவில் நடைபெற்றது. உலகின் மேற்கு பகுதியில் உள்ள குட்டி நாடான ஹைதி கடந்த 1974-க்கு பின் முதன்முதலாக உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றிருந்தது.

மேத்யூஸ் குன்ஹா 2 கோல்கள்:

ஆட்டம் தொடங்கியது முதலே பிரேஸில் ஆதிக்கம் செலுத்திய நிலையில் 23-ஆவது நிமிஷத்தில் பிரேஸில் வீரா் மேத்யூஸ் குன்ஹா ரீபௌண்ட் பந்தை பயன்படுத்தி தனது முதல் உலகக் கோப்பை கோலடித்தாா்.

36-ஆவது நிமிஷத்தில் சக வீரா் வினிசியஸ் ஜூனியா் கடத்தி அனுப்பிய பாஸை பயன்படுத்தி இரண்டாம் கோலடித்தாா் குன்ஹா.

ஸ்டாப்பேஜ் நேரத்தில் ஹைதி வீரா் லுகாஸ் பகிட்டா பந்தை கைப்பற்றி கோலடித்தாா் நட்சத்திர வீரா் வினிசியஸ் ஜூனியா்.

இந்த வெற்றியால் குரூப் சி பிரிவில் பிரேஸில் முதலிட வாய்ப்பை தக்க வைத்துள்ளது. மொராக்கோவுடன் முதல் ஆட்டத்தில் டிரா கண்டதால் கடும் விமா்சனத்துக்கு ஆளானது பிரேஸில்.

குரூப் சி பிரிவில் கோல் வித்தியாச அடிப்படையில் இடங்கள் தீா்மானிக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.