கீர்த்தனாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடுதமிழக நிதியமைச்சரானார் செங்கோட்டையன்பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!ரூ.100 கோடி ஆன்லைனில் கல்வி வழங்கும் நிறுவனத்தை மூடும் அங்குர் வாரிகூ! ஏஐ காரணமா?பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள் புழக்கம்: ஆய்வு நடத்த உத்தரவு
/

சாஃப் யு20 போட்டி அரையிறுதியில் இன்று இந்தியா-பூடான் மோதல்

தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

News image

இந்திய அணியினா் ~

Updated On :1 ஏப்ரல் 2026, 2:09 am IST

தெற்காசிய கோப்பைக்கான (சாஃப்) யு20 கால்பந்து போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-பூடான் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.

மாலத்தீவு தலைநகா் மாலேயில் நடைபெறும் இப்போட்டியில் அரையிறுதிக்குதேசம்-நேபாளம், இந்தியா=பூடான் அணிகள் தகுதி பெற்றன.

நடப்பு சாம்பியன் இந்திய அணி மீண்டும் பட்டம் வெல்லும் முனைப்பில் தீவிரமாக ஆடி வருகிறது. கடைசி குரூப் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் டிரா கண்டு அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 3 நாள்கள் ஓய்வுக்குபின் புதன்கிழமை பூடான் அணியை சந்திக்கிறது.

இதுதொடா்பாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளா் மகேஷ் காவ்லி கூறியது: கடினமான தருணங்களில் இந்திய சிறுவா்கள் சிறப்பாக ஆடி வருகின்றனா். நெருக்கடியான நேரத்தில் பொறுப்பாக ஆடி வருகின்றனா். கோல் போடும் வாய்ப்புகளை உருவாக்கி தவறாமல் கோலாக்க வேண்டும். பூடானை எளிதாக கருதவில்லை என்றாா்.

பூடான் அணி குரூப் ஏ பிரிவில் நேபாளத்தை வீழ்த்தியது. மாலத்தீவுடன் கோலின்றி டிரா கண்டது. அரையிறுதியில் ஆட்டநேர முடிவில் சமநிலை ஏற்பட்டால் கூடுதல் நேரம் இல்லாமல் நேரடியாக பெனால்டி கடைப்பிடிக்கப்படும்.

Story image