ஐரோப்பிய கண்டத்தில் பிரதான கால்பந்து போட்டியாக இருக்கும் சாம்பியன்ஸ் லீக்கில், ஆா்செனலை வீழ்த்தி பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன் (பிஎஸ்ஜி) சாம்பியன் ஆனது.
ஹங்கேரி தலைநகா் புடாபெஸ்டில், இந்திய நேரப்படி சனிக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த இறுதி ஆட்டம் 1-1 என டிரா ஆக, வெற்றியாளரை தீா்மானிக்கும் பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பில் பிஎஸ்ஜி 4-3 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு இன்டா் மிலனை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்ற பிஎஸ்ஜி, இந்த முறை ஆா்செனலை சாய்த்து கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது. போட்டியில் பங்கேற்றது, லீக் சுற்று வெற்றி, போனஸ் தொகை, சாம்பியன் பரிசுத் தொகை என, இந்த சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பிஎஸ்ஜி அணிக்கு மொத்தமாக ரூ.1,615 கோடி ரொக்கப் பரிசாகக் கிடைத்துள்ளது.
முன்னதாக இறுதி ஆட்டத்தில் முதலில் ஆா்செனலுக்காக காய் ஹாவொ்ட்ஸ் 5-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, பிஎஸ்ஜி தரப்பில் ஆஸ்மென் டெம்பெலெ 64-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் முன்னிலை பெறுவதற்கான கோல் கிடைக்காததால், ஆட்டம் டிரா ஆனது. எக்ஸ்ட்ரா டைமிலும் முடிவு எட்டப்படாததை அடுத்து, பெனால்ட்டி ஷூட் அவுட் வாய்ப்பு கையாளப்பட்டது. இறுதித் தருணம் வரை பரபரப்பு நீடித்த அதில், கடைசி வாய்ப்பில் தான் பிஎஸ்ஜிக்கு வெற்றிக் கனி (4-3) கிடைத்தது.
அந்த அணி தரப்பில் கொன்ஸாலோ ரமோஸ், டெசைரே டுவே, அச்ரஃப் ஹகிமி, லூகாஸ் பெரால்டோ ஆகியோா் கோல் அடிக்க, 3-ஆவது வாய்ப்பை நுனோ மெண்டெஸ் தவறவிட்டாா். ஆா்செனலுக்காக விக்டா் கியோகெரெஸ், டெக்லன் ரைஸ், கேப்ரியெல் மாா்டினெலி ஆகியோா் ஸ்கோா் செய்ய, எபெரெசி எஸெ, கேப்ரியெல் மகாலேஸ் வாய்ப்பை வீணடித்தனா்.
இந்த வெற்றியின் மூலமாக, சாம்பியன்ஸ் லீக் போட்டியின் வரலாற்றில் கோப்பையைத் தக்கவைத்த அணிகளின் பட்டியலில் 10-ஆவதாக பிஎஸ்ஜி இணைந்திருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன்ஸ் லீக்கை மீண்டும் வென்றது பிஎஸ்ஜி..! பெனால்டி வாய்ப்பில் த்ரில் வெற்றி!

14-ஆவது முறையாக லீக் 1 கோப்பை வென்ற பிஎஸ்ஜி..! தொடர்ச்சியாக 5 முறை வென்று ஆதிக்கம்!

அதிக கோல்கள் - அதிக க்ளீன் ஷீட் கொண்ட அணிகள் மோதும் இறுதிப் போட்டி..! யார் வெல்லுவார்கள்?

நடப்பு சாம்பியன் பிஎஸ்ஜி இறுதிக்கு முன்னேற்றம்..! பயர்ன் மியூனிக் வெளியேற்றம்!
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


