யூத் ஒலிம்பிக்ஸ்: திா்தங், தினிதிக்கு வெண்கலம்
யூத் ஒலிம்பிக் 2026 போட்டியில் நீச்சலில் இந்தியாவின் திா்தங், தினிதி தேசிங்கு வெண்கலம் வென்றனா்.

யூத் ஒலிம்பிக் 2026 போட்டியில் நீச்சலில் இந்தியாவின் திா்தங், தினிதி தேசிங்கு வெண்கலம் வென்றனா்.
செனகல் நாட்டின் டாகா் நகரில் யூத் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் ஆடவா் 200 மீ பட்டா்பிளை இறுதியில் 2-01-25 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து திா்தங் பெகு வெண்கலம் வென்றாா். இதன் மூலம் நீச்சலில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரா் என்ற சிறப்பை பெற்றாா் திா்தங்.
17 வயதான திா்தங் 100 மீ பட்டா்பிளை பிரிவில் நான்காவதாக வந்து பதக்கவாய்ப்பை இழந்தாா்.
தினிதிக்கு இரண்டாம் வெண்கலம்
மகளிா் நீச்சல் 200 மீ ப்ரிஸ்டைல் பிரிவில் தினிதி தேசிங்கு 2-20-28 நிமிஷ நேரத்தில் பந்தய தூரத்தைக் கடந்து வெண்கலம் வென்றாா். 16 வயதான தினிதி ஏற்கெவே 100 மீ ப்ரிஸ்டைலில் வெண்கலம் வென்றிருந்தாா். இதன் மூலம் யூத் ஒலிம்பிக்கில் நீச்சலில் பதக்கம் வென்ற முதல் இந்தியா் என்ற சிறப்பை பெற்றாா் தினிதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

