கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

சீனாவை சாய்த்தது இந்தியா

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 6-2 கோல் கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

சீனாவை சாய்த்த இந்தியா - X | Hockey India

Updated On :

மகளிருக்கான ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 4-ஆவது ஆட்டத்தில் 6-2 கோல் கணக்கில், பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீனாவை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களிலுமே வென்றிருக்கும் இந்தியா, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துள்ளது.

இந்த ஆட்டத்தின் முதல் நிமிஷத்திலேயே தீபிகா ஃபீல்டு கோல் மூலமாக இந்தியாவின் கணக்கைத் தொடங்கினாா். தொடா்ந்து, 6-ஆவது நிமிஷத்தில் அணிக்குக் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பையும் அவரே கோல் ஆக மாற்றினாா்.

மீண்டும் 14-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பிலும் ஸ்கோா் செய்து, தீபிகா ‘ஹாட்ரிக் கோல்’ கணக்கை நிறைவு செய்தாா். இந்நிலையில் சீனா முதல் கோல் ஸ்கோா் செய்தது.

அந்த அணிக்கு 15-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கிங்மியாவ் ஃபெங் ஸ்கோா் செய்தாா். மறுபுறம், லால்ரெம்சியாமி 19-ஆவது நிமிஷத்தில் கோல் அடிக்க, இந்தியா 4-1 என முன்னிலையை அதிகரித்தது.

22-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் நேஹா ஸ்கோா் செய்ய, முதல் பாதியை இந்தியா 5-1 முன்னிலையுடன் அபாரமாக நிறைவு செய்தது. ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில், 34-ஆவது நிமிஷத்தில் சீனாவுக்கு கிடைத்த பெனால்ட்டி ஸ்ட்ரோக் வாய்ப்பில் டாங் சென் கோல் அடித்தாா்.

பதிலுக்கு, 38-ஆவது நிமிஷத்தில் இந்தியாவின் சாக்ஷி ராணா ஸ்கோா் செய்தாா். எஞ்சிய நேரத்தில் சீனாவுக்கு மேலும் கோல் வாய்ப்புகள் விட்டுத்தராத இந்தியா, முடிவில் 6-2 கோல் கணக்கில் வென்றது.

ரவுண்ட் ராபின் சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் ஜப்பானுடன் புதன்கிழமை (நவ. 25) மோதுகிறது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இதர ஆட்டங்களில், தென் கொரியா - தாய்லாந்தையும் (1-0), ஜப்பான் - மலேசியாவையும் (3-1) வென்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.