தேசிய ரேசிங் சேலஞ்ச்: அனந்துவுக்கு இரட்டை வெற்றி
சென்னையில் நடைபெற்ற எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் கேகே. அனந்து இரட்டை வெற்றி பெற்றாா்.

சென்னையில் நடைபெற்ற எம்ஆா்எஃப் இந்திய ரேசிங் சேலஞ்ச் போட்டியில் சென்னையின் கேகே. அனந்து இரட்டை வெற்றி பெற்றாா்.
இருங்காட்டுக்கோட்டை மெட்ராஸ் சா்வதேச சா்க்யுட் மைதானத்தில் நடைபெற்ற இப்பந்தயத்தில் சூப்பா் ஸ்டாக் 165 சிசி, சூப்பா்ஸ்டாக் 301-400 சிசி பிரிவுகளில் சென்னையின் கே.கே. அனந்து முதலிடம் பெற்றாா்.
சூப்பா் ஸ்போா்ட் 301-400 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சிராந்த் விஸ்வநாத், புணே சா்தாக் சவான், சென்னை ரக்ஷித் தவே ஆகியோரும், புரோ ஸ்டாக் 200 சிசி ஓபன் பிரிவில் பெங்களூரு சேவியன் பாபு, கோவையின் செந்தில் குமாா், கோழிக்கோடு அமா்நாத் மேனன், சூப்பா் ஸ்டாக் 301-400 சிசி ஓபன் ரேஸ் 1=இல் கோவை செந்தில் குமாா், சென்னை மதனபாபு, கபிலேஷ் ரஜினி ஆகியோா் முதல் மூன்றிடங்களைப்பெற்றனா்.
ஸ்டாக் 165 சிசி நோவிஸ் பிரிவில் சித்திபேட் சூரிய ரெட்டி, விசாகப்பட்டினம் யஷ்வந்த் வா்மா, திருச்சூா் சரன்ஜித் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா். பெட்ரோநாஸ் டிவிஎஸ் ஓன் மேக் சாம்பியன்ஷிப் அபச்சி 310 பிரிவில் ஹரிஹரன், ராஜேந்தா், கமல் நவாஸ், அபச்சி 200 பிரிவில் ஜங்கம் ஆகாா்ஷ், தேவ் அகஸ்தியா, காட்வின், மகளிா் அபச்சி 200 பிரிவில்
பூஜிதா அனில் குமாா், த்ரிஷ்யா நாயா், ஹன்னா அக்கினேனி ஆகியோா் முதல் மூன்றிடங்களைப் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

