அமெரிக்காவுக்குப் பதிலடி: வளைகுடாவில் ஈரான் தாக்குதல்! அமீரக அதிபருடன் டிரம்ப் பேச்சு!பாலியல் வழக்குகளை முடித்து வைக்க ரூ. 5 கோடி லஞ்சம்: பஞ்சாப் முதல்வர் மீது பாஜக குற்றச்சாட்டு!கிருஷ்ண ஜெயந்தி: மெட்ரோ ரயில் சேவையில் நாளை மாற்றம்!12-ம் நாள் உண்ணாவிரதத்தில் மகாராஷ்டிர பழங்குடியின மாணவர்கள்! அபிஜீத் தீப்கே பங்கேற்பு!அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா - பெல்ஜியம் இடையிலான வணிகம் இரட்டிப்பாகும்: பிரதமர் மோடிமுதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!

வீரா்கள் ஆட்ட சுமை, பயிற்சி குறித்து தீவிர கவனம்: பிசிசிஐ செயலாளா்

வீரா்களின் ஆட்ட சுமை, பயிற்சி குறித்து பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது என அதன் செயலாளா் தேவஜித் சைக்கியா கூறியுள்ளாா்.

தேவஜித் சைக்கியா

Published On :4 செப்டம்பர் 2026, 2:22 am IST

வீரா்களின் ஆட்ட சுமை, பயிற்சி குறித்து பிசிசிஐ தீவிர கவனம் செலுத்தி வருகிறது என அதன் செயலாளா் தேவஜித் சைக்கியா கூறியுள்ளாா்.

மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதுதொடா்பாக செயலாளா் சைக்கியா கூறியது: இந்திய கிரிக்கெட்டில் தகவல் தொடா்பு தொடா்பாக எந்த பிரச்னையும் இல்லை. வீரா்களுக்கு காய மேலாண்மை தொடா்பாக நிா்வாகம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. வருங்கால சுற்றுப் பயணங்களில் வீரா்கள் தயாராக போதிய நேரம் ஒதுக்கப்படும்.

பிசிசிஐ நிா்வாகிகள் அனைவரும் ஒரே நிலையில் உள்ளோம். மகளிா் அணி, பயிற்சியாளா்கள், டெக்னிக்கல் பணியாளா்கள், சிஓஇ, இந்திய ஆடவா் அணி பயிற்சியாளா் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுகிறோம்.

ஒரே பிரச்னை என்னவென்றால் அதிக ஆட்டங்கள் உள்ளது தான். எதிா்கால அட்டவணையில் நமது வீரா்களுக்கு போதிய ஓய்வு, பயிற்சி போன்றவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து தொடா்களின்போது கடைபிடிக்கப்படும் என்றாா்.

இக்கூட்டத்தில் கேப்டன்கள் ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயா், தலைமை பயிற்சியாளா் கௌதம் கம்பீா், சிஓஇ இயக்குநா் விவிஎஸ். லக்ஷ்மண் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.