கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

கோட் விவாதம் தீர்க்கப்பட்டது... மெஸ்ஸி பகிர்ந்த விடியோ வைரல்!

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு எனக் கூறிய மெஸ்ஸி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருவது குறித்து...

A mural of Argentine soccer player Lionel Messi holding the World Cup trophy covers a building in Buenos Aires, Argentina, Monday, Aug. 31, 2026. (AP Photo/Natacha Pisarenko)

ஆர்ஜென்டீனாவில் வரையப்பட்டிருக்கும் மெஸ்ஸியின் ஓவியங்கள். - படம்: ஏபி

Published On :

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு எனக் கூறியதுக்குப் பிறகு லியோனல் மெஸ்ஸி பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. அதில், “கோட் விவாதம் தீர்க்கப்பட்டது” என்று அச்சிடப்பட்ட காட்சிகள் கவனம் பெற்றுள்ளன.

ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த லியோனல் மெஸ்ஸி (39 வயது) இனிமேல் சர்வதேச போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழிவிடுவதாகவும் ஆக.31ஆம் தேதி இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்தார்.

ஆர்ஜென்டீன கால்பந்து அணிக்கு ஆக. 2005 முதல் ஆக.2026 வரை 21 ஆண்டுகள் விளையாடியுள்ளார். அந்த அணிக்காக் அதிக கோல்கள் (125) அடித்தவராக சாதனை படைத்துள்ளார்.

உலகக் கோப்பையை 2022ஆம் ஆண்டு அவரது தலைமையில் வென்று கொடுத்தார். 2026 உலகக் கோப்பையிலும் இறுதிப் போட்டி வரைக்கும் முன்னேறி, ஸ்பெயினிடம் 0-1 எனத் தோல்வியுற்றது.

கால்பந்து உலகில் மெஸ்ஸி - ரொனால்டோவுக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இதில் யார் கோட் (Goat) என்ற விவாதம் அடிக்கடி ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறிவருகிறது.

இந்த நிலையில் மெஸ்ஸி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட ஸ்டோரியில் புதிய பிராண்ட் உடன் விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அதில் அவரது சாதனைகளை ரசீது (பற்றுச்சீட்டு) பாணியில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்தப் பற்றுச்சீட்டில் கோல்கள், அசிஸ்டுகள், எத்தனை நிமிஷங்கள் விளையாடினார், எதிலெல்லாம் முதலிடத்தில் இருக்கிறார் என்ற பட்டியல் நீண்டுக்கொண்டே வருகிறது. அதில் கடைசியாக ’கோட் விவாதம் தீர்க்கப்பட்டது’ வைத்தாகிவிட்டது எனவும் காட்டப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக மெஸ்ஸி 927 கோல்கள், 421 அசிஸ்ட்டுகளை செய்து அசத்தியுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Summary

"GOAT debate settled": Lionel Messi shares receipt-style Instagram post after international retirement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.