
எம்பாபே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்..! மெஸ்ஸியின் சாதனைக்கு பாதிப்பில்லை!
எர்லிங் ஹாலண்ட் தனது கால்பந்து வரலாற்றில் 300 கோல்களை நிறைவு செய்தது குறித்து...

எர்லிங் ஹாலண்ட் - படம்: எக்ஸ் / எர்லிங் ஹாலண்ட்
எர்லிங் ஹாலண்ட் தனது கால்பந்து வரலாற்றில் 300 கோல்களை (கிளப் மற்றும் தேசிய அணிகள் சேர்த்து) நிறைவு செய்துள்ளார். எம்பாபே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என கோவென்ட்ரி அணியை வீழ்த்தியது. இந்த வெற்றியுடன் சிட்டி அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 26ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இந்த கோல் உடன் கிளப் மற்றும் தேசிய அணிகள் சேர்த்து தனது 300ஆவது கோலை நிறைவு செய்துள்ளார்.
எம்பாபே, ரொனால்டோவை விட குறைவான போட்டிகளில் இந்த மைல்கல்லை எர்லிங் ஹாலண்ட் எட்டியுள்ளார். ஆனால், மெஸ்ஸி இவரை விட குறைவான போட்டிகளில் 300 கோல்களை அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிவேகமாக 300 கோல்கள்
1. லியோனல் மெஸ்ஸி - 365 போட்டிகள்
2. எர்லிங் ஹாலண்ட் - 384 போட்டிகள்
3. கிளியன் எம்பாபே - 398 போட்டிகள்
4. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 499 போட்டிகள்
Summary
Erling Haaland outpaces Ronaldo, Mbappe to 300 club goals but not Messi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






