
மான்செஸ்டர் டெர்பி போட்டியில் நடந்த விஏஆர் சர்ச்சை..! விதியும் முன்னாள் வீரர்களின் எதிர்ப்பும்!
பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான சர்ச்சையான விஏஆர் முடிவு குறித்து...

மான்செஸ்டர் டெர்பி போட்டியில் நடந்த விஏஆர் சர்ச்சை - படம்: எக்ஸ் / பிரீமியர் லீக்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியர் லீக்கில் மான்செஸ்டர் சிட்டி, மான்செஸ்டர் யுனைடெட் அணிகளுக்கு இடையேயான விஏஆர் முடிவு சர்ச்சையானது. இதற்கு பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.
மான்செஸ்டர் சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் ன்செஸ்டர் யுனைடெட் அணியை வீழ்த்தி அசத்தியது. இந்தப் போட்டியில் எர்லிங் ஹாலண்ட் 60ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார்.
தொடக்கத்தில் இந்த கோல் கள நடுவரால் ஆஃப்சைடு எனக் கொடுக்கப்பட்டது. பின்னர், விஏஆர் (விடியோ அசிஸ்டன்ட் ரெஃப்ரி) தலையிட்டு, அது கோல் என மாற்றப்பட்டது.
ஜோஸ்கோ கவார்டியோல் அடித்த பந்தை ஹாலண்ட் கோலாக மாற்றுவார். இதில் ஆஃப்சைடு நிலையில் நின்றிருந்த என்ஜோ பெர்னாண்டஸ் தலையினால் பந்தை கோலாக மாற்ற முயற்சிப்பார். ஆனால், பந்து அவரது தலையில் படாமல் சென்றது.
என்ஜோ பெர்னாண்டஸ் பந்தைத் தொடாததால், ஹாலண்ட் பந்து பாஸ் செய்தபோது ஆன்சைடாக இருந்தார் என விடியோ மூலம் நிரூபிக்கப்பட்டது.
விதியின்படி அது சரியாகவே இருக்கிறது. ஆனால், சர்ச்சையே என்ஜோ பெர்னாண்டஸ் செய்ததுதான்.அவர் குறுக்கே வராவிட்டால் யுனைடெட் அணியின் டிஃபென்டர் லிசான்ட்ரோ மார்டினெஸ் பந்தைத் தடுத்திருப்பார் எனக் கூறப்படுகிறது.
கால்பந்து ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இது ஆஃப்சைடு என்றும் விஎஆர் நடுவர்கள் செய்தது தவறு என்றும் கூறிவருகிறார்கள்.
#MUNMCI â 59â VAR OVERTURN
— Premier League Match Centre (@PLMatchCentre) September 13, 2026
VAR checked the refereeâs call of no goal for offside â and determined that Haaland was in an onside position and recommended that the goal was awarded.
The VAR also deemed that while in an offside position, Fernandez didnât play the ball. pic.twitter.com/TyTip3ACIh
Summary
What’s the VAR mistake controversy in Haaland’s Man City goal vs United?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






