இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

இந்திய அணி தோல்வியடைந்த இடம் எது? சச்சின் விளக்கம்

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

News image
Updated On :1 நவம்பர் 2021, 12:44 pm

DIN


நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு இது இரண்டாவது தோல்வி. இதனால், அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இந்திய அணிக்குக் கடினமாகியுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணி தோல்வியடைந்த இடம் குறித்து சச்சின் டெண்டுல்கர் பேஸ்புக் பக்கத்தில் விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

"முதல் பந்திலிருந்தே வில்லியம்சனின் பந்துவீச்சு மாற்றம் பிரமாதமாக இருந்தது. திட்டம் வகுத்தது நன்றாக இருந்தது. முதல் 6 ஓவரில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்தது. அடுத்த 5 ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. 6-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை இந்திய அணி 13 ரன்கள் மட்டுமே எடுத்தது. என்னைப் பொறுத்தவரை இந்த இடம்தான் முக்கியமான இடம். இந்த இடத்தில்தான் இந்திய அணி சரியாகக் கையாள்வதைத் தவறவிட்டது. ஓடி எடுக்கக் கூடிய எளிதான ரன்களுக்கு அங்கு இடமில்லை. அதுவே இந்திய பேட்டர்களை பெரிய ஷாட் ஆட நிர்பந்தித்தது.

ரிஷப் பந்த் களமிறங்கியவுடன் சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும் திசைகள் வில்லியம்சனால் மாற்றப்பட்டன. மீண்டும் ஒருமுறை புத்திசாலித்தனமான நகர்வு.

டேரில் மிட்செல் மற்றும் வில்லியம்சன் முக்கியமான பாட்னர்ஷிப்பைக் கட்டமைத்தனர். வில்லியம்சன் நியூசிலாந்துக்கு திடமான ஒரு வீரர். அவர் களத்தில் இருந்தால் ஆட்டத்தை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கிறார். மிட்செல் சில நல்ல ஷாட்களை விளையாடி, ஓடியும் ரன்கள் எடுத்தார்" என்றார் சச்சின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.