மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஸ்காட்லாந்திடம் தோற்றது ஏன்?: வங்கதேச அணி கேப்டன் பதில்

நடு ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார்.

News image
Updated On :18 அக்டோபர் 2021, 8:24 am

DIN

நடு ஓவர்களில் அதிக ரன்கள் குவிக்காததால் ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்ததாக வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியுள்ளார்.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் வங்கதேசம் - ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியைத் தோற்கடித்தது ஸ்காட்லாந்து. 

முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த வங்கதேச அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஸ்காட்லாந்திடம் தோல்வியடைந்தது பற்றி வங்கதேச அணி கேப்டன் மஹ்முதுல்லா கூறியதாவது:

ஆடுகளம் நன்றாக இருந்தது. 140 ரன்களை எடுத்திருக்க முடியும். நடு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கக்கூடிய ஒரு பெரிய ஓவர் எங்களுக்கு அமையவில்லை. பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆனால் பேட்டிங் குழு சரியாக விளையாடவில்லை. ஸ்காட்லாந்து அணியை 53/6 என்கிற நிலைக்குக் கொண்டு சென்ற பிறகு நாங்கள் ஆர்வத்தை இழக்கவில்லை. ஒரு விக்கெட் எடுத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். ஸ்காட்லாந்து பேட்டர்கள் சிறப்பாக விளையாடி அந்த ஸ்கோரை எடுத்தார்கள். 140 ரன்களை விரட்ட முடியவில்லையென்றால் நாங்கள் என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டுபிடித்து அதைச் சரிசெய்ய வேண்டும். அதே தவறை மீண்டும் செய்யக்கூடாது என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.