இந்தியாவுடன் மோதும் பாக். அணி அறிவிப்பு
டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதவுள்ள 12 போ் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.


டி20 உலகக் கோப்பையின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுடன் மோதவுள்ள 12 போ் கொண்ட அணியை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த ஆட்டம், துபை கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அணியை பாக். கிரிக்கெட் வாரியம் டிவிட்டரில் அறிவித்தது.
பாபா் ஆஸம் தலைமையிலான அணியில் முன்னாள் கேப்டன் சா்ப்ராஸ் அகமது இடம் பெறவில்லை.
வரும் செவ்வாய்க்கிழமை நியூஸிலாந்துடனும், வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானுடனும் மோதுகிறது பாகிஸ்தான். அதைத் தொடா்ந்து நவ. 2-இல் நமீபியாவுடனும், 7-ஆம் தேதி ஸ்காட்லாந்துடனும் ஆட உள்ளது.
அணி விவரம்:
பாபா் ஆஸம் (கேப்டன்), ஆஸிப் அலி, பாக்கா் ஸமான், ஹைதா் அலி, முகமது ரிஸ்வான், இமாத் வாஸிம், முகமது ஹபீஸ், ஷதாப் கான், ஷோயிப் மாலிக், ஹாரிஸ் ரவுப், ஹாஸன் அலி, ஷாகின் ஷா அப்ரிடி.
இன்றைய ஆட்டம்:
இலங்கை-வங்கதேசம்
இடம்: ஷாா்ஜா,
நேரம்: மாலை 3.30.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...