டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது.
கிங்க்ஸ்டனில் உள்ள அர்னோஸ் வாலே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

படம்| பிடிஐ
அதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குர்பாஸ் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்களுடன் 60 ரன்களும், இப்ராஹிம் ஜட்ரன் 6 பவுண்டரிகளுடன் 51 ரன்களும் விளாசினர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பாட் கம்மின்ஸ் ஹாட்ரிக்
ஆஸ்திரேலிய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய பாட் கம்மின்ஸ் ரஸித் கான் (17.6), கரிம் ஜனத் (19.1), குல்பதின் (19.2) ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆடம் ஜம்பா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஒரு உலகக் கோப்பையில் ஒரு வீரர் தொடர்ச்சியாக 2 முறை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும். அந்த சாதனையை பாட் கம்மின்ஸ் படைத்துள்ளார்.

படம்| பிடிஐ
இதனை தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி தொடக்கம் முதலே ஆப்கானிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 0 ரன்னிலும், டேவிட் வார்னர் 3 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனையடுத்து வந்த கேப்டன் மிட்சல் மார்ஷ் 12 ரன்களிலும், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

படம்| பிடிஐ
ஆஸ்திரேலிய அணிக்கு சுழற்பந்து வீச்சாளர் குல்பதின் நைப், நவீன் உல் ஹக் ஆகியோர் கடும் நெருக்கடி கொடுத்தனர்.
2023 ஆம் ஆண்டு உலக் கோப்பை போலவே தனி ஆளாக போராடிய கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக ஆடி 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 59 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீரர்களும் சரியாக சோபிக்காததால் 19.2 ஓவர்களுக்கு ஆஸ்திரேலியா 127 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனால், 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் அபாரமாக பந்து வீசிய குல்பதின் நைப் 4 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ஆப்கானிஸ்தான் அணி 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவிடம் ஏற்பட்ட தோல்விக்கு பலிதீர்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சூர்யவன்ஷிக்கு ரசிகரான ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ்!
மகளிா் ஒருநாள் கிரிக்கெட்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

பாட் கம்மின்ஸ் எனும் நான்... அணியில் இணைந்த சன்ரைசர்ஸ் கேப்டன்!
அபிஷேக் சர்மா vs இஷான் கிஷன்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் யார்?
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


