ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவிடம் தோல்வியைத் தழுவியது. தற்போது இந்திய அணி ஐசிசி நடத்தும் தொடரான டி20 உலகக் கோப்பையில் மீண்டுமொருமுறை இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது.
பார்படாஸில் இன்று (ஜூன் 29) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில், ஐசிசி தொடரின் இரண்டு இறுதிப்போட்டி தோல்விகள், இந்தியாவின் டி20 உலகக் கோப்பையை வெல்லும் நோக்கத்தை பாதிக்காது என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

படம் | AP
இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணி வீரர்கள் ஒவ்வொரு நாளையும் புதிய நாளாக பார்க்கின்றனர். அவர்கள் கடந்த கால போட்டிகளில் நிகழ்ந்தவற்றவை மனதில் சுமந்து செல்வதாக நான் நினைக்கவில்லை. கடந்த கால நினைவுகளிலிருந்து மீண்டு வீரர்கள் அடுத்த இலக்கை நோக்கி வேகமாக நகர்ந்து செல்கிறார்கள். இரண்டு சிறந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.
இந்த தொடர் முழுவதும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். இறுதிப்போட்டியில் விளையாடுவதற்கு இரண்டு அணிகளும் மிகவும் தகுதியானவர்களே. இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்திய அணி சமபலத்துடன் இருக்கிறது என்றார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியுடன் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் ஓய்வு பெறுவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

2027 ஒருநாள் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது ஆப்கன்!

எஃப்ஐஎச் உலகக் கோப்பை மகளிா் ஹாக்கி: இந்திய அணியினா் பயணம்

ஆசிய யூத் ஹாக்கி ஃபைவ்ஸ்: இந்திய ஆடவா் சாம்பியன், மகளிரணிக்கு வெள்ளி! உலகக் கோப்பைக்கும் தகுதி!

ஐசிசி தரவரிசையில் மீண்டும் முதலிடம் பிடித்த இந்திய டி20 அணி!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech





