விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வரும் நிலையில் சிதம்பரம் காவல் கோட்டம்

சிதம்பரம், ஆக. 11: சிசம்பரம் காவல் கோட்டத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. ÷சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கிள்ளை,

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 8:17 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம், ஆக. 11: சிசம்பரம் காவல் கோட்டத்தில் பல்வேறு குற்ற நிகழ்வுகளால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது.

÷சிதம்பரம் காவல் கோட்டத்தில் சிதம்பரம் நகர காவல் நிலையம், தாலுகா காவல் நிலையம், கிள்ளை, புவனகிரி, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், மருதூர் என 7 காவல் நிலையங்கள் உள்ளன.

÷வாகன திருட்டு, வீடு புகுந்து திருட்டு, லாட்டரி சீட்டு விற்பனை, வழிப்பறி, குடிகாரர்களின் அட்டகாசம், கட்டை பஞ்சாயத்து உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

÷சமீபத்தில் நடராஜர் கோயிலில் பெண்களிடம் சங்கிலி பறிப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. புவனகிரி, புதுச்சத்திரம், பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் ஒரே நாளில் பல கடைகளை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே புகுந்து திருடிச் சென்றனர்.

÷சமீபத்தில் லாரி டிரைவர் விஜயன் ரவுடிகள் கும்பலால் சிதம்பரம் அருகே வல்லம்படுகையில் கொலை செய்யப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்டார்.

÷போக்குவரத்து காவலர்கள் போதிய அளவில் இல்லாததால் போக்குவரத்தில் பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. கீழரத வீதியில் இருபுறமும் நிறுத்தப்படும் சுற்றுலாப் பயணிகளின் பஸ்கள், வேன்கள் ஆகியவற்றால் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

÷மேலரத வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, எஸ்.பி.கோயில் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு, போல்நாராயணன் தெரு, பஸ் நிலையம், காந்தி சிலை உள்ளிட்ட பகுதிகளில் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு தினந்தோறும் விபத்து நடைபெற்று வருகிறது.

÷15 ஆண்டுகளுக்கு முன்பு குற்றங்கள் அதிகமாக  நடைபெறும் நகரமாக இருந்ததால் சிதம்பரம் கோட்ட காவல்துறைக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்கள் ஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டு வந்தார்கள்.

÷தற்போது மீண்டும் குற்றங்கள் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. எனவே சிதம்பரம் கோட்டத்துக்கு ஐபிஎஸ் பயிற்சி முடித்தவர்களை மீண்டும் ஏஎஸ்பியாக நியமிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாகும்.

÷இதுகுறித்து கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. அஸ்வின் கோட்னீஷ் தெரிவித்தது: குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸ் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ரவுடிகளின் பட்டியல்கள் எடுக்கப்பட்டு அவர்கள் உளவுத்துறை போலீஸôரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

÷சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தாலும் அவர்கள் போலீஸôரால் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபவர்களை பிடிக்க தனிப்படை போலீஸôர் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.