இந்தச் சாலைகளில் கல்லூரிகள், தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நகரின் முக்கிய சாலைகளான அரக்கோணம் சாலை, திருப்பதி பைபாஸ் சாலை, சித்தூர் சாலை இவற்றில் தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்களும், இரு சக்கர மோட்டார் வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. திருத்தணியில் பல சாலைகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில்தான் உள்ளன. இதேபோல் ம.பொ.சி. சாலை, அரக்கோணம் சாலை, சித்தூர் சாலை, பைபாஸ் சாலை ஆகியவற்றின் பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.