அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

எல்லைக் காவலர் -தமிழறிஞர் மரபுரிமையர்களுக்கு ஓய்வூதியம்

சென்னை, ஜன. 8: எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 217 பேருக்கு ஓய்வூதியம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:  தமிழறிஞர்கள

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:50 am

தினமணி

சென்னை, ஜன. 8: எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 217 பேருக்கு ஓய்வூதியம் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

 இதுகுறித்து, முதல்வர் கருணாநிதி சனிக்கிழமை வெளியிட்ட உத்தரவு:

 தமிழறிஞர்களுக்காக ஓய்வூதியம் வழங்குவது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தலைமையிலான உயர்நிலைக் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 6-ல் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பரிந்துரைகள் அளிக்கப்பட்டன.

 அதையேற்று, எல்லைக் காவலர்கள் 12 பேருக்கு தலா ரூ. 4 ஆயிரம், ரூ. 15 மருத்துவப்படி, 55 தமிழறிஞர்களுக்குத் தலா ரூ. 3 ஆயிரம், ரூ. 15 மருத்துவப் படி, தமிழறிஞர்களின் மரபுரிமையர்கள் 142 பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 1,500, ரூ. 15 மருத்துவப்படி வீதம் கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

 இந்த உத்தரவின் காரணமாக, எல்லைக் காவலர்கள், தமிழறிஞர்களின் 217 குடும்பங்கள் பயன் அடைகின்றன. இதனால், அரசுக்கு ஆண்டுக்கு 53 லட்சத்து 61 ரூபாய் கூடுதலாகச் செலவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.