சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் ரூ. 90 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக 4 பேரை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸôர் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர்கள் சுஜதா ஹரநாத், ரத்தினமாலா. இவர்கள் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் 27 சென்ட் காலிமனையை துரைபாபுவிடம் இருந்து வாங்கினர்.
இந்நிலையில் இந்த காலிமனை மீது வில்லங்கம் போட்டுப் பார்த்தனர். அப்போது கோவளம் குப்பத்தைச் சேர்ந்த சந்தானம் (49), சென்னை அடையாறு இந்திரா நகரைச் சேர்ந்த மோகன்குமார் (38), கானாத்தூர் துரைராஜ் (38), பனையூர் சாதீக் பாட்சா (39) ஆகியோர் சேர்ந்து நிலத்தை அபகரித்தது தெரியவந்தது.
அதன் இன்றைய மதிப்பு ரூ. 90 லட்சம். இது குறித்து சுஜதா ஹரநாத், ரத்தினமாலா ஆகியோர் காஞ்சிபுரம் எஸ்.பி. விஜயகுமாரிடம் புகார் செய்தார்.
புகாரின்பேரில் காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸôர் வழக்குப் பதிவு 4 பேரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரஹ்மனுல்லா குர்பாஸ் சதம், அறிமுக வீரர்கள் அபார பந்துவீச்சு; இந்தியாவுக்கு 195 ரன்கள் இலக்கு!

எல்லாம் இனிதே... சேயோன் சிவகார்த்திகேயன்!

இன்றைய செய்திகள் ஜூன் 13 - நேரலை!

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope



