தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்தவெகவுக்கு ஆதரவு; திமுகவுடன் உறவு தொடரும்! - பெ. சண்முகம், மு. வீரபாண்டியன் பேட்டிமேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!தமிழ்நாட்டில் புதிய அரசை அமைக்க எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை: நயினார் நாகேந்திரன்தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!
/

மணல் கடத்தலில் நகராட்சி ஒப்பந்ததாரர் கைது

பழனியில் மணல் கடத்தல் தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

Updated On :15 ஏப்ரல் 2015, 7:01 pm IST

பழனியில் மணல் கடத்தல் தொடர்பாக நகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் மணல் திருட்டு அதிக அளவு நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் அதிமுக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பழனியில் நகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரும் மணல் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார். பழனி பழைய தாராபுரம் சாலையில் புதன்கிழமை வருவாய்துறை ஆய்வாளர் மகேஷ் வாகன தணிக்கையில் இருந்த போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியில் எந்த அனுமதியும் இல்லாமல் மணல் அள்ளப்பட்டு வந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து லாரி டிரைவரிடம் ஆவணங்கள் கேட்டுக் கொண்டிருந்த போது லாரியின் உரிமையாளரும், நகராட்சி ஒப்பந்ததாரருமான பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த ராமசாமி(50) சம்பவ இடத்துக்கு வந்து வருவாய்துறையினருடன் தகராறு செய்துள்ளார்.  இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் மகேஷ் பழனி டவுன் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரைத் தொடர்ந்து போலீஸார் நகராட்சி ஒப்பந்ததாரர் ராமசாமி மற்றும் லாரி டிரைவர் வில்வாதம்பட்டியை சேர்ந்த மாயவன்(28) ஆகியோரை மணல் கடத்தல், அரசு அலுவலரை மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.  மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது. 

கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் ராமசாமி மீது முன்னரே பழனி-திண்டுக்கல் சாலையில் சாக்கடைப்பணியின் போது அனுமதியின்றி வெடிகுண்டு வைத்து பாறைகளை உடைத்ததில் ஒரு வீடு சேதமான வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.