நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரையை வழங்கக் கூடாது. மாத்திரையை அப்படியே விழுங்கச் செய்யக் கூடாது. குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குடல் புழு மாத்திரையை வீட்டுக்குக் கொடுத்தனுப்பக் கூடாது.விடுபட்ட குழந்தைகளுக்கஹான சிறப்பு முகாம் பிப்ரவரி 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது என்றாலும், அதிகமாக குடல் புழு இருக்கும் குழந்தைகள் இந்த மருந்தை உட்கொள்ளும்போது லேசான மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், திறந்தவெளி, காற்றோட்டமானப் பகுதியில் படுக்க வைக்க வேண்டும். சுத்தமான குடிநீர், உப்பு சர்க்கரைக் கரைசல் கொடுத்து கண்காணிக்க வேண்டும். பக்க விளைவுகள் அதிகமானாலோ அல்லது தொடர்ந்து இருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவ அலுவலர், செவிலியர் செல்லிடப்பேசி எண்களை தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் என அவர்கள் கூறினார்கள்.