கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சிதம்பரத்தில் தமாகா இருசக்கர வாகன பேரணி

சிதம்பரம் காந்திசிலை அருகே இரு சக்கர வாகன பேரணி புறப்பட்டது. பேரணி எஸ்.பி.கோயில்தெரு, விழல்கட்டிபிள்ளையார்கோயில்தெரு, மந்தக்கரை, தில்லையம்மன்கோயில்தெரு, வண்டிகேட், சி.முட்லூர்

News image
Updated On :25 பிப்ரவரி 2015, 2:44 pm

ஜி.சுந்தரராஜன்

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் உறுப்பினர் சேர்க்கை வாகன விழிப்புணர்வு  பேரணி மற்றும் தெரு முனை பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் காந்திசிலை அருகே இரு சக்கர வாகன பேரணி புறப்பட்டது. பேரணி எஸ்.பி.கோயில்தெரு, விழல்கட்டிபிள்ளையார்கோயில்தெரு, மந்தக்கரை, தில்லையம்மன்கோயில்தெரு, வண்டிகேட், சி.முட்லூர், பி.முட்லூர், பரங்கிப்பேட்டை, பொன்னந்திட்டு, கிள்ளை, மண்டபம் வழியாக சிதம்பரம் மேலரதவீதியை அடைந்தது.முன்னதாக பேரணியை முன்னாள் எம்எல்ஏ கே.ராஜாங்கம் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். மூப்பனார் பேரவைத் தலைவர் தில்லை ஆர்.மக்கீன் வரவேற்றார். வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ எஸ்.புரட்சிமணி, முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களை பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி எம்.என்.ராதா, மாவட்ட மூப்பனார் பேரவைத் தலைவர் எஸ்.கே.வைத்தி, வாசன் பேரவைத் தலைவர் தில்லைகோ.குமார், முன்னாள் குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் பி.கே.காந்தி, நகரமன்ற உறுப்பினர் முகமதுஜியாவுதீன், இளைஞரணி நிர்வாகிகள் கே.ரஜினிகாந்த், ராஜாசம்பத்குமார், துரை.சிங்காரவேலு, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கே.நாகராஜ், வாசன் நற்பனை இயக்கத் தலைவர் ஜி.ஆறுமுகம், சம்பந்தமூர்த்தி, குமார் இன்பரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முடிவில் கே.ராஜராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.