ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பள்ளிகளில் குடியரசு நாள் விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப்


ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள பள்ளிகளில் நாட்டின் 66-வது குடியரசு தின விழா திங்கள்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள நரையன்குளம் ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குடியரசு நாள் விழா உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சி.பாலமுருகன் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் முன்னிலை வகித்தார்.தலைமை ஆசிரியை இ.ஜெஸிந்தா வரவேற்றார்.சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளர் அ.சி.வெள்ளையன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
3-5 வகுப்பு மாணவ மாணவியர் ஆங்கிலத்தில் பேராசை பெருநஷ்டம் என்ற நாடகத்தை நடத்திக் காட்டினர். மேலும் இதே வகுப்பு மாணவர்கள், மாணவர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுவது பெற்றோரா? ஆசிரியர்களா? என்றத் தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றத்தை நடத்திக் காட்டினர். இதில் சிறப்பாக பங்கேற்ற மாணவிகள் எம்.இசக்கிராணி, அ.அமலா, மாணவர் அ.மாரீஸ்வரன் ஆகியோருக்கும் இவர்களை பயிற்றுவித்த ஆசிரியை ச.பொன்மலரையும் கௌரவித்து டி.எஸ்.பி. வெள்ளையன் ரொக்கப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நாட்டில் தீவிரவாதம் பெருகி வருகிறது. நாட்டைக் காப்பதில் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம், நாட்டுப்பற்றை சிறு வயதிலேயே ஆசிரியர்கள் மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அ.கனியம்மாள், கிராம கல்விக் குழுத் தலைவி அ.சீத்தாலட்சுமி, ஏராளமான பெற்றோர், கிராம மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை ந.ரெங்கலதா நன்றி கூறினார்.லயன்ஸ் பள்ளி: ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி, தமிழ் வழி தொடக்கப் பள்ளி மற்றும் லயன்ஸ் இண்டர் நேஷனல் பள்ளி ஆகியவற்ற்றில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தாளாளர் எஸ்.ஆர்.முருகராஜன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவ மாணவியரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் அரிமா சங்கத் தலைவர் கு.சக்திவேல், பொருளாளர் கார்த்திக் உள்ளிட்ட அரிமா சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சுந்தரபாண்டியம்: சுந்தரபாண்டியம், அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் குருவையா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலசலிங்கம் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
மயூரா பள்ளி: அப்பையநாயக்கர்பட்டியில் உள்ள ஸ்ரீமயூரா இண்டர் நேஷனல் பள்ளியில் தாளாளர் முத்தையா தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர் கிராம மக்கள் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சி.எம்.எஸ்.: சி.எம்.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஜி.எட்வின் கனகராஜ் தேசிய கொடியை ஏற்றி வைத்து என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
வள்ளுவர் வித்யாலயா: வள்ளுவர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நிர்வாக அலுவலர் சங்கரநாராயணன் முன்னிலையில் பள்ளி தலைவர் கொ.சிவக்குமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். நிகழ்ச்சியில் தாளாளர் ரேணுகா, ஆசிரியைகள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...