விராலிமலையில் வைகோ உருவ பொம்மை எரிப்பு
விராலிமலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக வியாழக்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


விராலிமலை: விராலிமலையில், திமுக தலைவர் கருணாநிதியை அவதூறாக பேசியதாக வியாழக்கிழமை மதிமுக பொதுச் செயலர் வைகோவின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விராலிமலை மேற்கு ஒன்றியச் செயலாளர் அ. இளங்குமரன் தலைமையில் ஒன்று திரண்ட 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் ஊர்வலமாகச் சென்று, கடைவீதி மற்றும் சோதனைச்சாவடி அருகே வைகோ வின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தென்னலூர் எம். பழனியப்பன், மாவட்ட பிரதிநிதி ச. பாஸ்கர், ஆர். ராஜங்கம், இளைஞரணி அமைப்பாளர் எஸ். சிவா, ஓன்றிய கவுன்சிலர் அன்பழகன், எம். சுப்பையா, எஸ். முருகேசன், சேகர், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையறிந்த விராலிமலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று வைகோ உருவ பொம்மையை பிடுங்கி, எரிக்க முயன்ற 50 க்கும் மேற்பட்ட திமுகவினரை கைது செய்து அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...