ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்புமனு தாக்கல்

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

News image
Updated On :25 ஏப்ரல் 2016, 10:19 am

சி. உதயகுமார்

விராலிமலை: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக வேட்பாளர் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே. 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30 தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்நிலையில்,வேட்புமனு தாக்கல் தொடங்கி கடந்த 3 நாள்களாக எந்த ஒரு வேட்பாளரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை இந்த நிலையில் (திங்கள்கிழமை) 25-ம் தேதி  திமுக வேட்பாளர் எம். பழனியப்பன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக அவர் இலுப்பூர் சிவன் கோயிலில் தரிசனம் செய்தார் பின்னர் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று இலுப்பூர் கோட்டாட்சியரும், விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர். டெய்ஸிகுமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் த. சந்திரசேகர், ஒன்றியச் செயலாளர் அ. இளங்குமரன்(விராலிமலை மேற்கு)ஆர். எஸ். மாரிமுத்து(அன்னவாசல் வடக்கு) கே. எஸ். சந்திரன்(தெற்கு) நகரச் செயலர் வி. கிஜயகுமார்(இலுப்பூர்) க. சண்முகசுந்தரம்(விராலிமலை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.