விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் வேட்புமனு தாக்கல்
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.


விராலிமலை: விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அமைச்சர் விஜயபாஸ்கர் வியாழக்கிழமை மதியம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே. 16-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது.வேட்புமனு தாக்கல் செய்ய வரும் 29-ம் தேதி கடைசி நாளாகும். மனுக்கள் மீதான பரிசீலனை வரும் 30 தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில், வியாழக்கிழமை நண்பகல் 12.50 மணியிலிருந்து 1.20 மணிக்குள் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்ய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவுறுத்தியதின் பேரில், விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் 1.05 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக அவர் இலுப்பூர் சிவன் கோயிலில் தரிசனம் செய்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக, கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று இலுப்பூர் கோட்டாட்சியரும், விராலிமலை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான ஆர். டெய்ஸிகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கு மாற்று வேட்பாளராக விராலிமலை ஒன்றியம் கல்க்குடியைச் சேர்ந்த அக்கட்சியின் ஊராட்சி செயலர் கே. அய்யப்பன் மனு தாக்கல் செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...