தமிழக மக்களுக்கு முக்கியச் செய்தி: புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பு
வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: வங்கக் கடலில் புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், இது புயலாக மாறும் வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான நடா புயல் தமிழகத்துக்கு எதிர்பார்த்த மழையைத் தராமல் போனாலும், வறண்ட வானிலையை மாற்றிச் சென்றது. தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழைப் பொழிவுக்கும் காரணமாக இருந்தது.
வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் உருவான கியான்ட் மற்றும் நடா புயல்கள் தமிழகத்தை ஏமாற்றிவிட்டாலும், புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, டிசம்பர் 4ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எதிர்பார்த்தபடி, இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறும்பட்சத்தில், இதற்கு வர்டா என்று பெயரிடப்படும். (இந்த பெயர் பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்டது)
இந்த வர்டா புயல் காரணமாக தமிழகத்தில் மழைப் பற்றாக்குறை என்ற நிலை மாறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...