ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.16 லட்சம் பறிமுதல்

அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

News image
Updated On :16 மார்ச் 2016, 11:57 am

சி. உதயகுமார்

அன்னவாசல் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் ரூ.16 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமாநாடு மாநில நெடுஞ்சாலை குடுமியான்மலை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் எஸ். தமிழ்ச்செல்வன்(கூட்டுறவு சார்பதிவாளர்) சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ராஜாமுகமது உள்ளிட்டோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியே வந்த ஒரு டாடா சுமோ வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது அதில் கணக்கில் காட்டப்படாத பணம் ரூ.16 லட்சம் இருந்துள்ளது. விசாரணையில் ஓட்டுநர் பி. ரங்கநாதன்(29), ஏ.டி.எம். இயந்திரங்களில் வைப்பதற்கான பணம் என்று கூறினார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறிமுதல் செய்து இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.