இன்னும் நான்கு நாட்களுக்கு பெரிய அளவில் மழை கிடையாது: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததன் காரணமாக இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


சென்னை: புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததன் காரணமாக இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30ம் தேதி தொடங்கியது. தமிழக கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. தென்மாவட்டங்களில் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, கடந்த 2 நாட்களாக மழை இல்லாமல் வெயில் வாட்டி வருகிறது.
இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களிடம் பேசினார் .அப்போது அவர் கூறியதாவது:
மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புயல் சின்னம் வங்கதேசம் நோக்கி நகர்ந்ததால் சென்னையில் பெரிய அளவில் மழை இல்லை. இன்னும் நான்கு தினங்களுக்கு பெரிய அளவில் மழை பெய்ய வாய்ப்பு இல்லை.
அதே நேரத்தில் மாலை, இரவு, அதிகாலை நேரங்களில் லேசான சாரல் மழை மட்டுமே விழக்கூடும். இதனால் வெப்பம் அதிகரிக்கும். இருப்பினும், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமையன்று உருவான வளிமண்டல மேலடுக்கு காற்று சுழற்சி காரணமாக தென்மாவட்டங்களில் நேற்றும் மழை நீடித்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...