மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

புதுச்சேரியில் 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் நாராயணசாமி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2016, 7:45 am

சுஜித்குமார்


புதுச்சேரி: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி தொடக்கி வைத்தார்.

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை சார்பில் தீபாவளியை முன்னிட்டு 3.34 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 2 கிலோ இலவச சர்க்கரை வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது.

இதன்படி அரியாங்குப்பம், பாகூரில் குடும்ப அட்டைகளுக்கு இலவச சர்க்கரை வழங்கும் பணியை முதல்வர் நாராயணசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

புதுச்சேரியில் அரசின் முன் இரண்டு பணிகள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, பராமரிப்பு, மக்களுக்கான திட்டங்களை சீராக நிறைவேற்றுவதாகும். காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட பின் புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு நிலை மேம்பட்டுள்ளது.

குடும்ப அட்டைகளுக்கு தரப்படும் இலவச உணவுப் பொருள்களான அரிசி, சர்க்கரை போன்றவை பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதை அரசு தீவிரமாக மேற்கொள்ளும். ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு சர்க்கரை, அரிசி, போன்றவை துரிதமாக வழங்கப்படும் என்றார்.

கூட்டுறவு அமைச்சர் கந்தசாமி பேசுகையில்: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் இலவச அரிசி தரமில்லாமல் உள்ளது என புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு தரமான அரிசியை கிடைக்கச் செய்ய அரசு ஏற்பாடு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.