ரேஷன் பொருட்கள் சரியான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்
ரேஷன் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.


சென்னை: ரேஷன் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பன்னிரெண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாமாயில், பருப்பு வகைகள், மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் முன்னறிவிப்பின்றி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதேபோல் விநியோகிக்கப்படும் அரிசியம் தரமில்லாமல் புழு பூச்சிகள் நிறைந்தும், சாப்பிட பயன்படுத்த முடியாத நிலையில் தரமில்லாத அரிசி வழங்கபடுவதாகவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் குறை கூறி வருகின்றனர்.
உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், புதிதாக அதிகாரிகளை உடனடியாக நியமித்து இதுபோன்ற அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...