அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரேஷன் பொருட்கள் சரியான முறையில் விநியோகிக்கப்பட வேண்டும்: விஜயகாந்த்

ரேஷன் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்று தேமுதிக தலைவர்  விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :16 அக்டோபர் 2016, 7:30 am

DIN

சென்னை: ரேஷன் பொருட்கள் விநியோகம் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்று தேமுதிக தலைவர்  விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை விபரம் வருமாறு:

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பன்னிரெண்டு நாட்களே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்களின் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பொது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாமாயில், பருப்பு வகைகள், மண்ணெண்ணெய் போன்ற பல்வேறு பொருட்கள் முன்னறிவிப்பின்றி விநியோகம்  நிறுத்தப்பட்டுள்ளது வேதனைக்குரியது. அதேபோல் விநியோகிக்கப்படும் அரிசியம் தரமில்லாமல் புழு பூச்சிகள் நிறைந்தும், சாப்பிட பயன்படுத்த முடியாத நிலையில் தரமில்லாத அரிசி வழங்கபடுவதாகவும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மக்கள் குறை கூறி வருகின்றனர்.

உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிய உள்ள நிலையில், புதிதாக அதிகாரிகளை உடனடியாக நியமித்து இதுபோன்ற அடிப்படை தேவைகளை கவனிக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.