/

முதல்வர் பூரண நலன் வேண்டி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் வழிபாடு

தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலன் பெற்று மீண்டு தனது மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியைத் தொடர வேண்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவி

News image
Updated On :28 அக்டோபர் 2016, 9:52 am

கோ.ஜெயக்குமார்



ஸ்ரீவில்லிபுத்தூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா, பூரண உடல் நலன் பெற்று மீண்டு தனது மக்கள் பணி மற்றும் கட்சிப் பணியைத் தொடர வேண்டி தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா கே.பாண்டியராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.

தனது மனைவியுடன் ஸ்ரீஆண்டாள் கோவில் வந்த அமைச்சர் பாண்டியராஜனை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா முத்தையா, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் கோவிலில் டாக்டர் வெ.வாசுதேவன் பட்டர், அ.சுதர்ஸன் பட்டர் மற்றும் ஸ்தானிகம் ரெங்கராஜன் (எ) ரமேஷ் ஆகியோர் தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் பெற்று ஆட்சியைத் தொடர வேண்டி சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், அவரது மனைவி மற்றும் ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.