'ஸ்மார்ட் ரேஷன் கார்டு' திட்டம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்
ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.


ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைகள் (ரேஷன் அட்டைகள்) பயன்பாட்டில் இருந்து வருகின்றன. கடந்த பல ஆண்டுகளாக குடும்ப அட்டைகள் புதுப்பிக்கப்படாமல், ஒவ்வோர் ஆண்டும் உள்தாள் ஓட்டி கால நீட்டிப்பு செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
போலி குடும்ப அட்டைகளை நீக்கி முறைகேடுகளைத் தடுக்கவும் அத்தியாவசியப் பொருள்கள் கொள்முதலில் தமிழக அரசுக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களைத் தவிர்க்கவும் ரேஷன் ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்திற்காக ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை கொரட்டூரில் தொடங்கி வைத்தார்.
சென்னையைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்று முதல் நாள்தோறும் 10 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. தொடர்ந்து ஏப்ரல் 15-ஆம் தேதி வரை ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் நடத்தை விதி காரணமாக சென்னையில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளை இன்று வழங்க இயலாது. அதனால் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் இன்று ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...