அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மருத்துவ சிகிச்சை முடிந்து வீட்டுக்குத் திரும்பினார்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  சிகிச்சை முடிந்து இன்று காலை வீட்டுக்கு திரும்பினார்.

News image
Updated On :2 ஏப்ரல் 2017, 11:19 am

DIN

சென்னை: கடந்த 10 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்,  சிகிச்சை முடிந்து இன்று காலை வீட்டுக்கு திரும்பினார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கடந்த மார்ச் 22-ந்தேதி அன்று நள்ளிரவு சிகிச்சைக்காக ‘மியாட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான வருடாந்திர மருத்துவ பரிசோதனைக்குத்தான் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தே.மு.தி.க தலைமை கழகம் அப்பொழுது அறிக்கை வெளியிட்டது.

அதன் பிறகு சில நாட்களுக்கு முன்னால், போரூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், 'விஜயகாந்த் நலமாக உள்ளார், ஆண்டு பரிசோதனைக்ககாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விரைவில் நடைபெறவுள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வார்' என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் விஜயகாந்த் சிகிச்சை முடிந்து இன்று காலை 9 மணிக்கு வீடு திரும்பினார். சில நாட்கள் ஓய்வுக்கு பின்னர் அவர் ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.