இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்: 4 காவல்துறை உதவி ஆணையர்கள் மாற்றம்

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :3 ஏப்ரல் 2017, 10:57 am

தினமணி

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையொட்டி 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததை அடுத்து, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. அதற்கு வரும் 12ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தேர்தலையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.

இந்நிலையில் ஆர்.கே. நகரில் 4 காவல்துறை உதவி ஆணையர்கள் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதன்படி வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஆனந்த குமார், ராயபுரம் உதவி ஆணையர் ஸ்டீபன், திருவொற்றியூர் உதவி ஆணையர் குமார், எம்.கே.பி. நகர் உதவி ஆணையர் ஜெயசிங் ஆகியோர் மாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து டிஜிபி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.