இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சிறப்பாகச் செயல்படுகிறது தேர்தல் ஆணையம்

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 4:58 am

தினமணி

ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவொற்றியூரில் திங்கள்கிழமை மீனவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின்போது அவர் பேசியது: ஆர்.கே.நகர் தேர்தலில் தேர்தல் ஆணையம் சிறப்பாகச் செயல்படுவது பாராட்டுக்குரியது. நாம் ஒருசிலரை மாற்றச் சொன்னோம். அவர்கள் 30 பேரை மாற்றி உள்ளனர். இது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி.
2016-ஆம் ஆண்டு இதே போல் தேர்தல் நடத்தி இருந்தால் திமுக ஆட்சிக்கு வந்திருக்கும். இடைத்தேர்தலில் அதிமுகவின் இரு அணியினரும் டெபாசிட் பெற முடியாது. இனிவரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே நிலைதான் ஏற்படும். இரண்டு அணியினரும் ஓரணியாக இருந்து ஆட்சி செய்தபோது மக்களுக்கும், மீனவர்களுக்கும் எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் செய்து கொடுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் இருவர் மீதும் விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.