மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பத்திரிக்கையாளர்களை அவமதித்த விவகாரம்: இந்திய பிரஸ் கவுன்சிலிடம் மன்னிப்பு கேட்டார் விஜயகாந்த்

சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் அவமதிக்கும்படி நடந்து கொண்ட விவகாரங்களில்,

News image
Updated On :10 ஏப்ரல் 2017, 9:45 am

DIN

சென்னை: சென்னை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் பத்திரிகையாளர்கள் அவமதிக்கும்படி நடந்து கொண்ட விவகாரங்களில், இந்திய பிரஸ் கவுன்சிலிடம் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வருத்தம் தெரிவித்தார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த 27.12.15 அன்று சென்னை, அடையாறு, மத்திய கைலாஷ் பகுதியில் நடந்த, அவரது கட்சியின் ரத்த தான முகாமுக்கு வந்திருந்தார். அப்பொழுது நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர், '2016ல் அ.தி.மு.க., ஆட்சியை பிடிக்குமா?' என, கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த விஜயகாந்த், ''அ.தி.முக., ஆட்சியை பிடிக்காது. இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? உங்களுக்கு அந்த தைரியம் இருக்கா?'' என கூறியவர், திடுமென, பத்திரிகையாளர்களை நோக்கி காரித் துப்பினார். இதனால், அங்கு கூடிய நிருபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதன் பின்னர் கடந்த வருடம் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக 21.04.16 அன்று சேலம் சென்ற விஜயகாந்த், அங்கு கூட்ட நெரிசலில் தன்னிடம் கேள்வி கேட்க முயன்ற பத்திரிகையாளர்களை நோக்கி மிரட்டும் தொனியில் பேசினார்.

இந்த இரண்டு சம்பவங்களின் காரணமாக அவர் மீது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விஜயகாந்தின் வழக்கறிஞர் மணி, இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் மேற்குறிப்பிட்ட இரண்டு சம்பவங்களிலும் பத்திரிகையாளர்களிடம் நடந்து கொண்ட முறைக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட பிரஸ் கவுன்சில் அவர் மீதான வழக்குகளை வாபஸ் பெறுவதாக அறிவித்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.