சென்னையில் கனமழை: செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்தும் அதிகரிப்பு
தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.


சென்னை: தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
வரலாறு காணாத வறட்சியால் சென்னையைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளும் வறண்டு போயின. செம்பரம்பாக்கம் ஏரியும் வறண்டு போனதால், சென்னை வாழ் மக்கள் குடிநீருக்காக கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் கன மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் இரு தினங்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் வறட்சியால் வாடிய செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரிக்கு, தற்போது ஏரிக்கு வினாடிக்கு 186 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 101 மில்லியன் கன அடியாக உயர்ந்து இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...