சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்துப் பரிமாற்றம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:42 pm

DIN


சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வமும் சந்தித்து, கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்த முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை வரவேற்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. பிறகு இருவரும் அருகருகே அமர்ந்திருந்தனர். பின்னர் எழுந்து நின்று, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்ததன் சாட்சியாக, இருவரும் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். பிறகு முதல்வர் பழனிசாமி உரையாற்றினார். அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் செயல்படுவார் என்றும், இணை ஒருங்கிணைப்பாளராக தான் செயல்படுவேன் என்றும் கூறினார்.

மேலும், துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி. முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் செயல்படுவர் என்றும் பழனிசாமி அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.பி. முனுசாமி உரையாற்றினார்.

இதன் மூலம், கடந்த பிப்ரவரி 7ம் தேதி பிரிந்து சென்ற இரு அணிகளும் இன்று ஒன்றிணைந்துள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.