சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகம் வந்தார் ஓ. பன்னீர்செல்வம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:42 pm

DIN


சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைவதை முன்னிட்டு, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருகை தந்துள்ளார்.

அதிமுக தலைமை அலுவலகம் வந்த ஓ. பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் தரப்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருடன், ஆதரவாளர்கள் மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் வந்துள்ளனர். தமிழக அமைச்சர்கள் அவர்களை வரவேற்றனர்.

அதிமுக தலைமை அலுவலக வளாகமே தமிழக அமைச்சர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களால் நிரம்பி வழிகிறது.

ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் தலைமை அலுவலகத்துக்கு வந்திருப்பதன் மூலம், கடந்த ஓரிரு நாட்களாக இரு அணிகள் இணைப்பில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.