கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? நிலக்கோட்டை எம்எல்ஏ தங்கதுரை

எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

News image
Updated On :24 ஆகஸ்ட் 2017, 7:58 am

தினமணி

எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம், இது தான் சொகுசு வாழ்க்கையா? என்று தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுவையில் தனியார் விடுதியில் தங்கியுள்ள அவர் இன்று கூறியதாவது:
நான்கு நாட்கள் இங்கு தங்குவதற்காக வந்துள்ளோம். இதில் இரண்டு நாட்கள் முடிந்துள்ளது. எங்கள் அணிக்கு எம்.எல்.ஏக்கள் ஆதரவு அதிக அளவில் உள்ளது. இதனால் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை உயரும். இது பற்றி முழுமையாக தெரிவிக்க முடியாது.

வெளியில் சென்ற பிறகு ஆதரவு எம்.எல்.ஏக்களை அழைத்து பேசி முடிவு செய்வோம். எங்களது துணை பொதுசெயலாளர் அறிவுரைப்படி கருத்து பரிமாற்றம் செய்து வருகிறோம். இங்கு மகிழ்ச்சியாகவே இருக்கிறோம். நாங்கள் உல்லாசமாக தங்கியிருப்பதாக தவறான தகவல்களை பரப்புகின்றனர்.

ஆனால் உண்மையில் எவ்வித வசதிகளின்றி காட்டில் வசிக்கிறோம். இது தான் சொகுசு வாழ்க்கையா? தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை. அங்கிருந்தால் மிரட்டப்படுவோம். பாதுகாப்பு கருதியே இங்கு தங்கியுள்ளோம். எங்களது சொந்த பணத்திலே இங்கு தங்கியுள்ளோம் என்றார் தங்கதுரை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.