தங்கம் பவுனுக்கு ரூ. 112 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ. 22, 360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
Updated on
1 min read

ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து, ரூ. 22, 360-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கின்றன.
சென்னையில் வியாழக்கிழமை நிலவரப்படி, ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.14 அதிகரித்து, ரூ.2,795- க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா அதிகரித்து, ஒரு கிராம் வெள்ளி ரூ. 41.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ. 41,500 -ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,795
1 பவுன் தங்கம் ரூ. 22,360
1 கிராம் வெள்ளி ரூ. 41.50
1 கிலோ வெள்ளி ரூ. 41,500 
புதன்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்-ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் ரூ. 2,781
1 பவுன் தங்கம் ரூ. 22,248
1 கிராம் வெள்ளி ரூ. 41.10
1 கிலோ வெள்ளி ரூ. 41,100

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com