ஜல்லிக்கட்டு விவகாரம்: வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பு!
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நடந்து வரும் தொடர் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும்வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.


சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாநிலம் முழுவதும் நடந்து வரும் தொடர் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும்வகையில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நாளை நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட உள்ளனர்.
இதுகுறித்து பேட்டியளித்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன், 'இந்த புறக்கணிப்பு போராட்டமானது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது அல்ல என்றும், ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் 'பீட்டா' அமைப்புக்கு எதிரான போராட்டம் மட்டுமே' என்று தெரிவித்தார்.
இன்று காலையிலும் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே சில வழக்கறிஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களுடன் பேரணி நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...