சென்னையில் தீவிர கண்காணிப்பில் மத்திய, மாநில போலீஸார்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் இருந்து உதவிகள் அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய, மாநில போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.


ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு சென்னையில் இருந்து உதவிகள் அளிக்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து மத்திய, மாநில போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.
சில மாதங்களுக்கு முன் ராஜஸ்தானில் ஜமீல் அகமது என்பவர் அங்கு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாரிடம் சிக்கினார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் மயிலாப்பூர் முகமது இக்பால் என்ற இளைஞர் மூலம் ரூ.65 ஆயிரம் ஐ.எஸ். இயக்கத்துக்கு மாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இவர் ராஜஸ்தான் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பில் உள்ள சென்னை இளைஞர்களைப் பிடிக்க ராஜஸ்தான் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை கொண்டித் தோப்பு ஆரூண் ரஷீத் ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதிதிரட்டி கொடுத்தது தெரியவந்தது. கடந்த 3}ஆம் தேதி ராஜஸ்தான் போலீஸார் சென்னை வந்து ஆரூண் ரஷீத்தை பிடித்துச் சென்றனர். பர்மா பஜாரில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஆரூண் ரஷீத் ரூ.5 லட்சம் நிதிதிரட்டி கொடுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்தது. சிரியாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதிதிரட்டுவதாக கூறி ஆரூண் ரஷீத் பண வசூலில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில்தான் கடலூர் பரங்கிப்பேட்டை அகமது என்பவர் சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 7) பிடிபட்டார். ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஐ.எஸ். இயக்கத்துக்கு நிதி கொடுத்ததாகக் கூறப்படும் சென்னை மண்ணடி ராஜா முகம்மது, சிக்கந்தர், வண்ணாரப்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்த ரியாசுதீன் ஆகியோருக்கு ராஜஸ்தான் போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பாக 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் யார்}யார் என்கிற விவரங்களையும் ராஜஸ்தான் போலீஸ் படை சேகரித்து வைத்துள்ளது. ஐ.எஸ். இயக்கத்துடனான இவர்களின் தொடர்பு பற்றி முழுமையாக விசாரணை நடத்திய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...