கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கு உரிமை இல்லை: மாநிலங்களவை உறுப்பினர் அதிரடி! 

அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை ...

News image
Updated On :2 மார்ச் 2017, 6:25 am

DIN

சென்னை: அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது உள்ளிட்ட உட்கட்சி விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை என்று  அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக இருப்பவர் நவநீதகிருஷ்ணன். இவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் தெரிவித்ததாவது:

அதிமுகவின் கட்சிப்பொறுப்புகளில் யாரை நியமிப்பது என்பது இந்த கட்சியின் உள் விவகாரமாகும். அப்படியே அதில் ஏதாவது பிரச்சினை இருந்தாலும் அதை எங்களுக்குள் முடிவு செய்து கொள்வோம். என்னைப் பொறுத்த வரையில் இந்த விவகாரத்தில் தலையிட நீதிமன்றத்திற்கோ அல்லது தேர்தல் ஆணையத்திற்கோ எந்த உரிமையும் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.