கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆர்.கே.நகர் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி போட்டி: திருமாவளவன் அறிவிப்பு!

வரும் ஏப்ரல் மதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் ...

News image
Updated On :10 மார்ச் 2017, 2:02 pm

DIN

சென்னை: வரும் ஏப்ரல் மதம் 12-ஆம் தேதி நடக்க உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.

மக்கள் நலக்கூட்டணி தலைவர்களான  ஜி.ராமகிருஷ்ணன், தொல்.திருமாவளவன் ஆகியோர் இன்று சென்னை தி.நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினர்.

ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மக்கள் நலக்கூட்டணி முடிவு செய்துள்ளது. கூட்டணியில் உள்ள மூன்று கட்சிகளும் பேசி முடிவு செய்து ஓரிரு நாளில் இறுதி முடிவு அறிவிக்கப்படும். . அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வுக்கு மாற்றாக தொடர்ந்து நாங்கள் செயல்படுவோம். மாற்றுத் திட்டத்தை முன்வைத்து மக்களை நாங்கள் சந்திக்க உள்ளோம்

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார். இந்த ஆலோசனையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்யின் மாநில செயலாளர் முத்தரசன் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.