ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் பூக்குழி உற்சவம்: கொடியேற்றத்துடன் தொடக்கம்
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம்


விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஸ்ரீவில்லிபுத்தூர், அருள்மிகு பெரிய மாரியம்மன்கோவில் பூக்குழி உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான பூக்குழி (தீ மிதித்தல்) 27-ம் தேதி நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் நடைபெறும் இந்த உற்சவத்தில், கொடிபட்டம் மாரியம்மன்கோயில் தெரு சாலியர் புது மண்டபத்திலிருந்து காலை நகர் வலமாக எடுத்து வரப்பட்டது. பின்னர் செயல் அலுவலர் மு.சுந்தர்ராஜூ முன்னிலையில், பூசாரி ஹரிஹரன் கொடியேற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
13 நாட்கள் நடைபெறும் இந்த உற்சவத்தில் ஒவ்வொரு நாளும் அம்மன் வெவ்வேறு வாகனங்களில் புறப்பாடு ஆகி மண்டபங்களில் எழுந்தருளுவார். 12-ம் திருநாளான 27-ம் தேதி (திங்கள்கிழமை) பகல் 1.30 மணிக்கு பூக்குழி உற்சவம் நடைபெறுகிறது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதம் இருந்து தீ மிதிப்பர். 13-ம் திருநாளான 28-ம் தேதி தேரோட்டத்துடன் நிகழ்ச்சி நிறைவு பெறும். நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகளை தக்கார் ச.ராமராசா, செயல் அலுவலர் மு.சுந்தர்ராஜூ ஆகியோர் செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமார் தலைமையில் போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...