ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் கோயில் மற்றும் வடபத்ர சயனர் கோயிலில் தனது மனைவி மற்றும் சகோதரியுடன் பன்னீர்செல்வம் வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்கள் அவரை சந்தித்தனர். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளேன். அரசியல் பேச விரும்பவில்லை என்று கூறிச் சென்றுவிட்டார்.
பின்னர் மேற்குத் தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பில் உள்ள தனது குல தெய்வமான பேச்சியம்மன் கோயிலில் குடும்பத்துடன் பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
இவரது வருகையையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் ஆய்வாளர் ஜெ.மகேஸ்குமார் தலைமையில் நகர் முழுமைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...