கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஆர்.கே.நகர் தொகுதியில் மார்ச் 23 முதல் பிரச்சாரம்: டி.டி.வி.தினகரன் பேட்டி!

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சரத்தை மார்ச் 23 முதல் தொடங்குவேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் ...

News image
Updated On :17 மார்ச் 2017, 2:51 pm

DIN

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சரத்தை மார்ச் 23 முதல் தொடங்குவேன் என்று அதிமுக துணைப் பொதுச் செயலாளரும் , அத்தொகுதி அதிமுக வேட்பாளருமான டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிஇல்போட்டியிடும் தினகரன் இன்று மாலை அத்தொகுதிக்கு உட்பட்ட  புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அருணாசல ஈஸ்வரர் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே நடைபெற்ற  சிறப்பு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்த பின், அவர் அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசியதாவது:

நான் முன்னரே கூறியிருந்தபடி ஆர்.கே. நகர் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்லபடுத்திய திட்டங்கள் அனைத்தையும் எனது தேர்தல் வாக்குறுதியாக அளித்து அவற்றை நிறைவேற்றுவேன்.

சின்னம் தொடர்பான விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் எங்கள் தரப்பு ஆவணங்களை அளித்து வெற்றி பெறுவோம். ஆர்.கே.நகரில் எனது பிரச்சாரத்தை மார்ச் 23-ம்தேதி முதல் துவங்க உள்ளேன்.

இவ்வாறு தினகரன் கூறினார்.பேட்டியின் பொழுது அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.